×

"தற்கொலைப் படையாக பாகிஸ்தானுக்கு செல்ல தயார்"- அமைச்சர் பேச்சால் பரபரப்பு

 

பிரதமர் மோடி​யும், உள்​துறை  அமைச்​சர் அமித்ஷாவும் அனு​மதி  அளித்​தால் நான் பாகிஸ்​தானுக்கு  தற்​கொலை படை​யாக செல்ல  தயா​ராக இருக்​கிறேன் என கர்​நாடக வீட்டு வசதித் துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கானின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்​நாடக வீட்டு வசதித் துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான், “பிரதமர் மோடி​ மற்றும் உள்​துறை  அமைச்​சர் அமித்ஷா அனு​மதியுடன் எனக்கு ஒரு தற்​கொலை வெடிகுண்டை அளித்​தால்  எனது உடலில் கட்​டிக் கொண்டு பாகிஸ்​தானுக்கு சென்று  எதிரி​களை தாக்​கு​வேன். நான் நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு பேசவோ இல்லை. நான் வெறும் வார்த்தைகளுக்​காக  கூற​வில்​லை, அல்லா மீது  ஆணையாக கூறுகிறேன். நமது எதிரிகளை அழிக்க நான்  எனது உயிரையும் கொடுக்க  தயாராக இருக்கிறேன்” என்றார்.