×

கர்நாடக அணைகள் திறப்பு: 7700 கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து!

கர்நாடக மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று 7700 அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. ஆனால், ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்தது. தற்போது ஓரளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4650 கன அடியும், கபினியில் இருந்து 1500 கன
 

கர்நாடக மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று 7700 அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. ஆனால், ஜூன், ஜூலை

மாதத்துக்கான தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்தது. தற்போது ஓரளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4650 கன அடியும், கபினியில் இருந்து 1500 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு வந்தது. காலையில் 7 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 7700 அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நல்ல மழை பெய்தால் தமிழகத்துக்கான தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடகத்திலிருந்து போதுமான தண்ணீர் வராத நிலையில் விவசாயிகள் அச்சத்தில் இருந்தனர். தற்போது தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.