×

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மாய் நியமனம்

கர்நாடகாவின் 20ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மாய் பதவியேற்கிறார். கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று பெங்களூருவில் தனியார் விடுதியில் நடந்த பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் பசவராஜ் பொம்மாய் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படார். இந்த கூட்டத்தில், தர்மேந்திர பிரதாப் மற்றும் எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான பசுவராஜ் கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். 61 வயதான பாசவராஜ் பொம்மாய் இதற்கு முன்பு
 

கர்நாடகாவின் 20ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மாய் பதவியேற்கிறார்.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று பெங்களூருவில் தனியார் விடுதியில் நடந்த பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் பசவராஜ் பொம்மாய் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படார். இந்த கூட்டத்தில், தர்மேந்திர பிரதாப் மற்றும் எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான பசுவராஜ் கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். 61 வயதான பாசவராஜ் பொம்மாய் இதற்கு முன்பு 2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் நடந்த பாஜக ஆட்சியின் போது நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். பசவராஜ் பொம்மாயின் தந்தை எஸ்.ஆர். பொம்மாய் கர்நாடகாவின் 11 ஆவது முதல்வராக கடந்த 1996 முதல் 1998 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது. 2007 ஆம் ஆண்டு தந்தை மறைந்த பிறகு 2008ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மாய் பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ், நாளை பதவியேற்கவுள்ளார்.