×

5 மாநிலங்களில் இருந்து வரும் ரயில் மற்றும் விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை – எடியூரப்பா விளக்கம்

பெங்களூரு: 5 மாநிலங்களில் இருந்து வரும் ரயில் மற்றும் விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்க முடிவு செய்தோம். We
 

பெங்களூரு: 5 மாநிலங்களில் இருந்து வரும் ரயில் மற்றும் விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்க முடிவு செய்தோம்.

“கர்நாடகாவுக்கு வர விமானங்கள் மற்றும் ரயில்களுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். கொரோனா ஆபத்து அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சாலை வழியாக நுழைவது தடைசெய்யப்பட்டாலும், ஏற்கனவே இயங்கும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்” என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.