×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில்பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட 32 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்பி[ப்பு வழங்குகிறது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில்
 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில்பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட 32 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்பி[ப்பு வழங்குகிறது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் சிபிஐ நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. சென்னையில் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.