×

ஜே.பி. நட்டாவைச் சந்தித்த காக்ரோச் ஜனதா பார்ட்டியினர்

 

NEET தேர்வு விவகாரம் தொடர்பாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கும் CJP அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், புது தில்லியில் உள்ள மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். 

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்த பிறகு, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், நாங்கள் மதியம் 12 மணி அளவில் நட்டாஜியின் இல்லத்திற்குச் சென்றோம். பிற்பகல் 2:15 மணியளவில் அவரைச் சந்தித்தோம். நாங்கள் அவரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். முதலாவதாக, சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் காணொளிச் செய்தி மூலம் மக்களிடம் பேச அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, திறமையற்ற கல்வி அமைச்சர் என்று நாங்கள் கருதும் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மூன்றாவதாக, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; ஒன்று பிற்பகல் 2 மணி அளவிலும், மற்றொன்று மாலை 4 மணி அளவிலும் நடந்தது. இந்தக் கோரிக்கைகள் குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்து, அவர்களின் முடிவை எங்களுக்குத் தெரிவிப்பதாக நட்டாஜி கூறினார். அவரிடமிருந்து (ஜே.பி. நட்டா) என்ன உறுதிமொழி கிடைத்தது என்று கேட்டபோது ​​ரங்கா கூறுகையில் மூத்த தலைவர்களுடன் இது குறித்து விவாதிப்பதாகவும் எடுக்கப்படும் முடிவு விரைவில் எங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்பது மட்டுமே எனக்குக் கிடைத்த உறுதிமொழி என்றார்.