×

அம்பானி போட்ட கடன் கணக்கு…. ரூ.78,562 கோடி கொடுத்த ஜியோ…

நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலிய வர்த்தகம் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனம் என்ற நிலையை எட்டும் என 2019 ஆகஸ்டில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். முகேஷ் அம்பானி வெறும் வார்த்தையோடு நில்லாமல் அதனை செயல்படுத்தவும் ஆரம்பித்து
 

நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலிய வர்த்தகம் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனம் என்ற நிலையை எட்டும் என 2019 ஆகஸ்டில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

முகேஷ் அம்பானி வெறும் வார்த்தையோடு நில்லாமல் அதனை செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார். கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து மே 4ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1.15 சதவீத பங்குகளை ரூ.5,665.75 கோடி வாங்கியது. இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்த அடுத்த சில தினங்களில் (மே 8) தனியார் பங்கு முதலீ்ட்டு நிறுவனமான விஸ்தாவுக்கு ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை ரூ.11,367 கோடிக்கு விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது.

அதனைதொடர்ந்து கடந்த 17ம் தேதியன்று ஜியோவின் 1.34 சதவீத பங்குகளை ரூ.6,598.38 கோடிக்கு ஜெனரல் அட்லாண்டிக் வாங்கியதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (மே 22) கே.கே.ஆர். நிறுவனம் ரூ.11,367 கோடிக்கு ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது. ஆக, முகேஷ் அம்பானி ஜியோவின் 17.12 சதவீத பங்குகளை 5 நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து ரூ.78,562 கோடி முதலீட்டை திரட்டி விட்டார். இந்த பணத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக பயன்படுத்துவார் என தகவல்