×

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து - 3 ராணுவ வீரர்கள் பலி!

 

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று ராணுவ வீரர்கள் ஏற்றிக்கொண்டு நகர் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. நகர் தேசிய பெட்டரி ஜெஷ்மா என்ற இடத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் அந்த வாகனம் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் தறிகெட்டு அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த 700 அடி பள்ளத்தில் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 
விபத்து தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.