×

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள தொலைதூர மலை கிராமமான சிசோட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14, 2025) மேக வெடிப்பால் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமடைந்தனர். இறந்தவர்களை அடையாளம் காண, அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் அவர்களின் படங்களைப் பகிர்ந்தனர். அப்படி மீட்கப்பட்ட உடல்களில் 30 உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 38 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதவி மைய எண்களும் (9858223125, 6006701934, 9797504078, 8492886895, 8493801381, 7006463710) அறிவிக்கப்பட்டுள்ளன.


கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமை குறித்து ஜம்மு காஷ்மீர் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜி மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஜி ஆகியோரிடம் பேசிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளார்.