×

டெல்லி குண்டுவெடிப்பு: ஒப்புக் கொண்ட பயங்காரவாத அமைப்பு… சமூக வலைதள உரையாடலில் அம்பலம்!

டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அறியப்படாத ஒரு பயங்காரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5 மணியளவில் சிறிய குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனினும் ஒருவர் காயமடைந்தார். நான்கு கார்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இச்சம்பவம் யாரால் நிகழ்த்தப்பட்டது என்று தெரியாமல் இருந்தது. தொடர்ந்து அப்பகுதியை அடைத்துவைத்து மக்கள் யாரையும் அனுமதிக்காமல் பாதுகாப்புப் படையினர்
 

டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அறியப்படாத ஒரு பயங்காரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5 மணியளவில் சிறிய குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனினும் ஒருவர் காயமடைந்தார். நான்கு கார்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இச்சம்பவம் யாரால் நிகழ்த்தப்பட்டது என்று தெரியாமல் இருந்தது. தொடர்ந்து அப்பகுதியை அடைத்துவைத்து மக்கள் யாரையும் அனுமதிக்காமல் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர் குழு கருகிய நிலையிலிருந்த கைக்குட்டை, இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கடிதம் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இதுகுறித்தான ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. மிகப்பெரிய அளவிலான குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான முன்னோட்டமாக சிறிய சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குண்டுவெடித்த இடத்திலிருந்து சில கிமீ தொலைவிலுள்ள விஜய் சவுக்கில் தான் குடியரசு தினத்தின் இறுதி விழாவான பீட்டிங் ரீட்ரீட் (Beating Retreat) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விழாவில் பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கியமான விஐபிகள் கலந்துகொண்டிருந்தது கவனித்தக்கது. இதனால் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி டெல்லி சிறப்பு படைப் படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சூழலில், குண்டுவெடிப்புக்கு சம்பவத்திற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சிகள் மேற்கொண்ட ஆய்வில், சமூக வலைதளங்களில் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதல் சம்பவத்தால் பெருமிதம் கொள்வது போல் பதிவிட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளன. இதுவரையில் இப்படியொரு அமைப்பை யாரும் கேள்விபட்டதில்லை என்றும், இந்த அமைப்பு யாரால் இயக்கப்படுகிறது என தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.