×

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தன. எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, “எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார். பாரத
 

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தன. எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, “எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார். பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்தார். மேலும் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா விருதை மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக எஸ்பிபி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தேசிய விருது, பிலிம்பேர் விருது மற்றும் மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.