×

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசியல் ரீதியான விமர்சிப்பது சரியில்லை!- சுஷாந்த் வழக்கில் கருத்து கூற சிவசேனா மறுப்பு!

மும்பையில் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தவிர்க்கும்படி சிவசேனா கூறியுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை பற்றிய படத்தில் ஹீரோவாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். சுஷாந்த் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பீகார் அரசியல்வாதிகள் குரல்
 

மும்பையில் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தவிர்க்கும்படி சிவசேனா கூறியுள்ளது.


கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை பற்றிய படத்தில் ஹீரோவாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். சுஷாந்த் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பீகார் அரசியல்வாதிகள் குரல் எழுப்பினர். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலரும் வலியுறுத்தினர்.

இதற்கு சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் கடும் கண்டனம் தெரிவித்துவந்தார். இன்று இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சஞ்சய் ரவுத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு சட்டம் பற்றி நன்கு தெரியும். இது பற்றி மும்பை போலீஸ் கமிஷனர் அல்லது அட்வகேட் ஜெனரல் பேசுவார்கள். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது.


உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை அரசியல் ரீதியாக விமர்சிப்பது சரியானதாக இருக்காது. நம்முடைய நீதி அமைப்புகள் உலகத்திலேயே சரியான அமைப்பாக உள்ளது. யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை” என்று கூறினார். அதே நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.