×

திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை கொடுத்த முஸ்லீம்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு இஸ்லாமியர்கள் காய்கறிகளை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். இதனால் கோயிலுக்கு நன்கொடை என்பது கோடிக்கணக்கில் குவிந்து வருகிறது. உதாரணத்திற்கு திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று கணக்கிடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 2 கோடி வசூலான போது, நேற்று ஒரேநாளில்
 

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு இஸ்லாமியர்கள் காய்கறிகளை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். இதனால் கோயிலுக்கு நன்கொடை என்பது கோடிக்கணக்கில் குவிந்து வருகிறது. உதாரணத்திற்கு திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று கணக்கிடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 2 கோடி வசூலான போது, நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.3 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு தினந்தோறும் மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு இஸ்லாமியர்கள் இணைந்து காய்கறி காய்கறிகளை நன்கொடையாக அளித்துள்ளனர். சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை அனுப்பியுள்ளனர். பக்தர்களுக்கு உணவு வழங்குவது இறைவனுக்கு அளிப்பதற்கு சமம் என்று கூறியுள்ள அவர்கள், இது தங்களால் முடிந்த சிறிய உதவி என்றும் கூறியுள்ளனர்.ஏழுமலையான் கோவில் அறக்கட்டளைக்கு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.