×

வித்தியாச கெட்டப்பில் வேவு பார்த்த பாகிஸ்தான் ஸ்பை கைது… இந்திய ராணுவ ரகசியங்கள் கசிந்ததால் அதிர்ச்சி!

அண்டை நாடான பாகிஸ்தான் ஆட்கள் நம் நாட்டிலும் நம் நாட்டு ஆட்கள் அங்கேயும் விதவிதமான கெட்டப்களில் உளவு பார்ப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக அவர்கள் ராணுவ நடவடிக்கைகள் குறித்தே மோப்பம் பிடிப்பார்கள். அவர்கள் ஒரு கடை வைத்திருக்கலாம், காய்கறி விற்கலாம். ஆனால் பிடிபட்டால் அவ்வளவு தான். கரணம் தப்பினால் மரணம் என்பது போல தான் இந்த உளவு விளையாட்டு. கத்தி மேல் நடப்பதற்குச் சமம். இதைச் சொல்ல காரணம் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான பகுதியான ராஜஸ்தானிலுள்ள
 

அண்டை நாடான பாகிஸ்தான் ஆட்கள் நம் நாட்டிலும் நம் நாட்டு ஆட்கள் அங்கேயும் விதவிதமான கெட்டப்களில் உளவு பார்ப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக அவர்கள் ராணுவ நடவடிக்கைகள் குறித்தே மோப்பம் பிடிப்பார்கள். அவர்கள் ஒரு கடை வைத்திருக்கலாம், காய்கறி விற்கலாம். ஆனால் பிடிபட்டால் அவ்வளவு தான். கரணம் தப்பினால் மரணம் என்பது போல தான் இந்த உளவு விளையாட்டு. கத்தி மேல் நடப்பதற்குச் சமம்.

இதைச் சொல்ல காரணம் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான பகுதியான ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்ற இடத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த உளவாளி ஒருவரை டெல்லி போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவிற்கு பலம் சேர்க்கும் பகுதியாக பொக்ரான் ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதுமே உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி முஜிபுர் ரஹ்மான் என்ற உளவாளி வேவு பார்த்திருக்கிறார்.

இதில் ஆச்சரியமளிக்கக் கூடிய விசயம் என்னவென்றால் அவர் ராணுவ மையத்திற்கு காய்கறிகள் சப்ளை செய்பவராக வலம் வந்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்தைக் கையிலெடுத்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி அவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டு தகவல்களைச் சேகரித்துள்ளார். அவர் கைதானபோது அவரிடமிருந்த இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள், ராணுவ தளங்கள் குறித்த வரைபடம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள், ஆவணங்களை ஆக்ராவைச் சேர்ந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்பவர் தனக்கு தந்ததாக ரஹ்மான் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் இதற்காக பணம் பெற்றுக்கொண்டு ராணுவ ரகசியங்களைக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ ஆவணங்களை பெற்று உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் ரஹ்மான் கொடுக்க வேண்டும் என்பதே அவருக்கான டாஸ்க். கடந்த சில ஆண்டுகளாக இதேபோல பல்வேறு ரகசிய ஆவணங்களை ஐஎஸ்ஐ அமைப்பிற்கு இவர் அளித்துள்ளார்.