×

வட்டிக்கு வட்டி வசூலிக்கப்போவதில்லை – மத்திய அரசு தகவல்!

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது வட்டிக்கு வட்டி முறையை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அரசு, இஎம்ஐ கடனை செலுத்தும் கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க தயாராக இருப்பதாக
 

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது வட்டிக்கு வட்டி முறையை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அரசு, இஎம்ஐ கடனை செலுத்தும் கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க தயாராக இருப்பதாக தெருவி தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோரை கடன் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க கால அவகாசம் வழங்கியிருந்தனர். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்த நிலையில், ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்போவதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மேலும் வீட்டுக்கடன், தனி நபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றுக்கு மாத தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் சிறு, குறு, தொழில் கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.