×

வட்டிக்கு வட்டி வசூல் – மத்திய அரசுக்கு ஒருவார கால அவகாசம்!

வட்டிக்கு வட்டி வசூல் விவாகரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஒருவார காலம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதிக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் , வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை. அதேபோல்
 

வட்டிக்கு வட்டி வசூல் விவாகரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஒருவார காலம் அவகாசம் அளித்துள்ளது. 


கொரோனா ஊரடங்கு காலத்தில்  ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதிக்கும் வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆம் தேதி  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் , வீட்டுக் கடன்,  தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை. அதேபோல் சிறு, குறு, தொழில் கடன்,  கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை  என்று மத்திய அரசு தெரிவித்தது. 


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  வட்டி வசூல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கேள்விகளுக்குப் பதில் தர மத்திய அரசுக்கு ஒரு வாரக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அரசு பிரமாணப் பத்திரத்தில் பதிலளிக்கவில்லை. மேலும்  வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்ற அரசின் அறிவிப்பில் சந்தேகங்கள் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு ஒரு வாரக் கால அவகாசம் அளித்து விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.