அம்மாடியோவ்... ரூ.2,396 கோடி... இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிஸ்டார் டைவிங் கப்பல் கடற்படையில் இணைப்பு
ரூ.2396 கோடியில் 80 சதவீதம் உள்நாட்டு சிந்தனையுடன் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார் போர் கப்பல் விசாகப்பட்டினம் கடற்கரையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இருந்து ஐஎன்எஸ் நிஸ்டாரில் போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரூ.2,396 கோடியில் நிஸ்டார் போர் கப்பல் நெருக்கடியில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவி வழங்கும் திறனைக் கொண்டிருக்கும் வகையில் இந்த போர்க்கப்பல் 80 சதவீத உள்நாட்டு சிந்தனையுடன் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இந்த கப்பல் 10,500 டன் எடையுடன் 120 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த போர் கப்பல் முற்றிலும் ரிமோட் அடிப்படையில் இயங்கும். டைவிங் குழு, பல்நோக்கு தளங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்ளது.
கிழக்கு கடற்படை கடற்கரையில் மற்றொரு போர்க்கப்பல் இணைக்கப்பட்டு கடலில் ரோந்து, ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிஸ்டார் முக்கியமான சேவைகளை வழங்கும். இந்த போர் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் இந்திய கடற்படை அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.