×

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்கும்?….தொழில்துறை உற்பத்தி சரிவு…. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்தான்….

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. அந்த மாத பொறுத்தவரை கடைசி 7 நாட்கள்தான் முழுமையான லாக்டவுன் இருந்தது. ஆனாலும் இதனால் கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 18.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் முழுமையான லாக்டவுன் இருந்தது இதனால் அந்த மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டு இருந்தது. மேலும்
 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. அந்த மாத பொறுத்தவரை கடைசி 7 நாட்கள்தான் முழுமையான லாக்டவுன் இருந்தது. ஆனாலும் இதனால் கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 18.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் முழுமையான லாக்டவுன் இருந்தது இதனால் அந்த மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டு இருந்தது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி மைனஸ் 38.12 சதவீதம் குறைந்தது. இதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடுமையாக சரிந்து இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்தப்படியே கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு 55.5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரத்தை மற்ற மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாத சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் கடந்த மே மாத உணவு பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த மாதத்தில் உணவு பணவீக்கம் 9.69 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு பணவீக்கம் சிறிது குறைந்துள்ளது ஆறுதலான விஷயம். 2020 ஏப்ரல் மாதத்தில் உணவு பணவீக்கம் 10.5 சதவீதமாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிப்பதில் உறுதியாக கவனம் செலுத்துவதால், கடனுக்கான வட்டி விகிதத்தை அது மேலும் குறைக்கும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.