ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் - மத்திய அரசு
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த 2 வார கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஈரான் இந்த 2 வார அவகாசத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அல்லது அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டால், அமெரிக்காவின் அனுமதி இல்லாமலேயே இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடரும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் இந்தியா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தத்தை பயன்படுத்தி ஈரானிலிருந்து விரைவாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தூதரகம் பரிந்துரைத்த வழியாக மட்டுமே நாட்டினை கடக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தூதரக தொடர்பு எண்கள் +989128109115, +989128109109; +989128109102; +989932179359, மின்னஞ்சல் முகவரியான cons.tehran@mea.gov.in மூலமாக தொடர்பு கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.