×

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : மூன்றாம் அலையின் அறிகுறியா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 26,115 ஆகவும், நேற்று 26,964 ஆகவும் இருந்த நிலையில் இன்று மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,3,35,31,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 282 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 383 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 26,115 ஆகவும், நேற்று 26,964 ஆகவும் இருந்த நிலையில் இன்று மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,3,35,31,498 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 282 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 383 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,050ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 31,990 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,28,15,731 பேர் குணமாகியுள்ளனர். 3,01,604பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் இந்தியாவில் இதுவரை 83,39,90,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..