×

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது!!

 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை  நெருங்கியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஒமிக்ரான் பாதிப்பு ஆகியவை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1.68 லட்சமாக தினசரி கொரோனா இருந்த நிலையில் இன்று ஒரேநாளில் அதிவேகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தினசரி கொரோனா எண்ணிக்கை என்பது 2 லட்சத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒரேநாளில்  60,405 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை 442 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,55,319 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பெருந்தொற்றானது தற்போது இந்தியாவிலும் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 27 மாநிலங்களில் பரவியுள்ள ஒமிக்ரான் எண்ணிக்கை தற்போது 4,868 ஆக அதிகரித்துள்ளது.