×

இந்தியாவில் லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்!!

 

இந்தியாவில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை அதிக பதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மூன்றாம் அலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்ததால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. இருப்பினும் தற்போது தொற்று பாதிப்பு என்பது மீண்டும் இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. 

 இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,17,100  ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்   58,097 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை  90,928  ஆக பதிவானது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்தியாவில் ஒரேநாளில் 30,836 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து  இதுவரை குணமானோர் எண்ணிக்கை 3,43,71,845 ஆக அதிகரித்துள்ளது.
 கடந்த 24 மணிநேரத்தில்  302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  நேற்று 325  பலியான நிலையில் இன்று அதிகபட்சமாக 302 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இந்தியாவில் இதுவரை 4,83,178   பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 3,71,363  பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை தடுக்கும் முக்கிய ஆயுதமாக சொல்லப்படும் தடுப்பூசியானது  149.66 கோடி டோஸ்  செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.