×

மீண்டும் தலைதூக்கும் கொரோனா: 16 ஆயிரத்தை எட்டியது பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. பிற நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்திருக்கிறது. படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இருந்த கொரோனா அச்சம் நீங்கி அலட்சியப் போக்குடன் செயல்பட தொடங்கியதே இதற்கு காரணம் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவிட்டால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட வாய்ப்பு இருப்பதாகவும்
 

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. பிற நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்திருக்கிறது. படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இருந்த கொரோனா அச்சம் நீங்கி அலட்சியப் போக்குடன் செயல்பட தொடங்கியதே இதற்கு காரணம் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவிட்டால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரை 1,42,42,547 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக 16,488 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 12,771 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தற்போது 1,59,590 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,79,979 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 1,07,63,451 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.