×

கைக்குலுத்து சுமூகமாக செல்ல சீனா, இந்தியா முடிவு!

இந்திய – சீன எல்லையான லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த தாக்குதலின் போது சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்த நிலையில், சீன ராணுவ அதிகாரி உட்பட 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில் இருந்து வீரர்களின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் இருந்தே லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து சீன ராணுவம்
 

இந்திய – சீன எல்லையான லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த தாக்குதலின் போது சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்த நிலையில், சீன ராணுவ அதிகாரி உட்பட 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில் இருந்து வீரர்களின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் இருந்தே லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து சீன ராணுவம் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அத்துமீறியதால் இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் விதமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில் சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு சுமூக பேச்சுவார்த்தை எட்டப்பட்டது.

இந்நிலையில் எல்லையில் கூடுதலான படைவீரர்களை குவிப்பதை நிறுத்திக் கொள்வது என இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன என சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருவதை நிறுத்த இந்தியா சீனா ஒப்புதல் அளித்தது. மேலும் நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும் இந்தியா – சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.