×

வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்க.. இல்லைன்னா ரூ.5 ஆயிரம் அபராதம்… 6 மாதம் ஜெயில்… உத்தரகாண்ட் அரசு அதிரடி…

உத்தரகாண்டில் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. நாடு முழுவதும் ரணகளத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 1,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6
 

உத்தரகாண்டில் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. நாடு முழுவதும் ரணகளத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 1,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத்தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது.

இதற்காக தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 2 மற்றும் 3ல் திருத்தங்கள் செய்துள்ளது. தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் அவசர சட்டத்துக்கு அம்மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்துள்ளார். கேரளா மற்றும் ஒடிசாவுக்கு அடுத்து இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்த 3வது மாநிலம் உத்தரகாண்ட். மேலும் அந்த மாநிலத்தில் தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியதும் அந்த திருத்தங்களில் அடங்கும்.