×

மாணவர்களின் பள்ளி கட்டணம் தள்ளுபடி… ஆனாலும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் சம்பளம்… முன்னுதாரணமாக மாறிய உ.பி. தனியார் பள்ளி…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட செலவுகளுக்கே அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் இந்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்துவதாக தகவல். ஆனால் உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்ததோடு, ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் சம்பளம் வழங்கி மற்ற தனியார் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. உத்தர
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட செலவுகளுக்கே அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் இந்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்துவதாக தகவல். ஆனால் உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்ததோடு, ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் சம்பளம் வழங்கி மற்ற தனியார் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் உள்ள பிரபலமான தனியார் பள்ளி நியூ ஸ்காலர் அகாடமி. இந்த பள்ளியில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அனைத்து பெற்றோர்களாலும் கட்டணத்தை செலுத்த முடியாது என்பதை உணர்ந்து, ஜூன் வரையிலான 3 மாத கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக நியூ ஸ்காலர் அகாடமி பள்ளியின் பிரின்சிபால் மம்தா மிஸ்ரா கூறியதாவது: இங்கு சமூகத்தின் பல்வேறு தரப்பை சேர்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். அனைத்து பெற்றோர்களாலும் கட்டணத்தை செலுத்த சாத்தியமில்லை. அதனால் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளோம்.

அதேசமயம் பள்ளியின் அலுவலகர்கள், ஆசிரியர்கள் வழக்கம் போல் சம்பளம் பெறுகின்றனர். தற்போது ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவித்து வருகிறோம். வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் சேனல் ஆகியவை வாயிலாக மாணவர்களை இணைத்து வருகிறோம். கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான மாணவர்களின் பாதுகாவலர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். நாங்கள் நேர்மறையான பதிலை பெற்று வருகிறோம். ஆனால் ஒவ்வொரு மாணவருக்கும் இன்டர்நெட் வசதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.