×

வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆணுறை வழங்கும் பீகார் அரசு! அவனுக்கு அவன் பிரச்னை…

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு
 

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. சிலர் நடந்தே ஊருக்கு சென்றுள்ளனர்.

சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு பின் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில அரசு ஆணுறைகளை வழங்கிவருகிறது. தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவே ஆணுறைகள் வழங்கப்படுவதாக பீகார் மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதும் தங்களின் கடமையே என அறிவித்துள்ள அம்மாநில அரசு, NGO உதவியுடன் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.