×

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா!

இதுவரை உலகம் முழுவதும் 91 கோடியே 75 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து626 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 54 லட்சத்து 53 ஆயிரத்து 247 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு
 

இதுவரை உலகம் முழுவதும் 91 கோடியே 75 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து626 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 54 லட்சத்து 53 ஆயிரத்து 247 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 5,08,953லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,09,713 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245ஆக ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,273 ஆக அதிகரித்துள்ளது.