×

தள்ளுபடி விலையில் எதிர்ப்புச் சக்தி பொருள்கள் – மக்கள் மருந்தகங்களில் ஏற்பாடு

கொரோனா பேரிடர் இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்களைக் காத்துக்கொள்ள கடும்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தொற்றாமல் இருக்கவும் தாக்கிவிட்டால் காத்துக்கொள்ளவும் எதிர்சக்தி பொருள்கள் அவசியம் என வழிகாட்டப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சத்துள்ள உணவுபொருள்களும் அளிக்கப்படுகின்றன. எனவே, எதிர்ப்புச் சக்திப் பொருட்களை மலிவு விலையில் அளிக்க மத்திய அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தியுள்ளார். ’கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக, இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சத்து பொருட்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பொருட்கள் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தரத்தில் சிறந்த இந்தப் பொருட்கள், சந்தை விலையுடன் ஒப்பிடும் போது
 

கொரோனா பேரிடர் இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்களைக் காத்துக்கொள்ள கடும்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தொற்றாமல் இருக்கவும் தாக்கிவிட்டால் காத்துக்கொள்ளவும் எதிர்சக்தி பொருள்கள் அவசியம் என வழிகாட்டப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சத்துள்ள உணவுபொருள்களும் அளிக்கப்படுகின்றன. எனவே, எதிர்ப்புச் சக்திப் பொருட்களை மலிவு விலையில் அளிக்க மத்திய அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்களின்  மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய  ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தியுள்ளார்.

’கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக,  இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  சத்து பொருட்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பொருட்கள்  மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

தரத்தில் சிறந்த இந்தப் பொருட்கள், சந்தை விலையுடன் ஒப்பிடும் போது  26 சதவீதம் விலை குறைவாகக்  கிடைக்கும்.  மக்கள் மருந்தகங்களின்  வலுவான வலைப்பின்னலின் மூலம் இந்தப் பொருட்கள் மக்களை பெரிய  அளவில்  சென்றடைந்து  அவர்களுக்கு பலனளிக்கும்’ என்று அவர் பேசும்போது குறிப்பிட்டார்.

புரோட்டின் பவுடர் வெண்ணிலா, சாக்லேட் உள்ளிட்ட சுவைகளில் விற்பனை செய்யப்படும் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் விலை அதிகபட்ச விலையிலிருந்து 26 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.