×

“இன்ஸ்டாகிராமில் இளம் பெண்களை வீழ்த்தும் வாலிபர்” பெண் போல பேசி, பெண்களின் போட்டோக்களை திருடி ப்ளாக் மெயில் செய்வார்..

ஆந்திராவின் கர்னூலில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஹமது என்ற நபர் ,ஊடகத்தில் ஒரு பெண்ணோடு நட்பு கொண்டு பழகினார் .ஆனால் அவர் தான் ஒரு பெண்ணென்று கூறி ஏதோ ஒரு பெண்ணின் போட்டோவை ப்ரொபைல் படமாக வைத்து பழகியுள்ளார் .சாட் பண்ணியுள்ளார் .அப்போது அந்த பெண் அவரிடம் தன்னுடைய பல அந்தரங்க விஷயங்கள் ,போட்டோக்கள் போன்றவற்றை பகிர்ந்துள்ளார் சிலநாள் கழித்து அந்த பெண்ணின் போட்டோக்கள் சில மார்பிங் செய்யப்பட்டு ஊடகங்களில் உலா வந்தது.அதை
 

ஆந்திராவின் கர்னூலில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஹமது என்ற நபர் ,ஊடகத்தில் ஒரு பெண்ணோடு நட்பு கொண்டு பழகினார் .ஆனால் அவர் தான் ஒரு பெண்ணென்று கூறி ஏதோ ஒரு பெண்ணின் போட்டோவை ப்ரொபைல் படமாக வைத்து பழகியுள்ளார் .சாட் பண்ணியுள்ளார் .அப்போது அந்த பெண் அவரிடம் தன்னுடைய பல அந்தரங்க விஷயங்கள் ,போட்டோக்கள் போன்றவற்றை பகிர்ந்துள்ளார்


சிலநாள் கழித்து அந்த பெண்ணின் போட்டோக்கள் சில மார்பிங் செய்யப்பட்டு ஊடகங்களில் உலா வந்தது.அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் ,இந்த போட்டோக்கள் தாம் இன்ஸ்டாகிராமில் அந்த நபரிடம் பகிர்ந்து கொண்டதாயிற்றே என்பதையறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார் .

பிறகு அந்த நபரிடம் அந்த பெண் பேசி, தம்முடைய போட்டோக்களை நீங்கள் ஏன் இப்படி ஊடகத்தில் வெளியிட்டீர்கள் அதை உடனே நீக்குங்கள் என்றபோது அதற்கு அவர் ,10000 கொடுத்தால் நீக்குகிறேன் என்று பிளாக் மெயில் செய்தார் .
மேலும் அந்த பெண்ணின் போட்டோவை வாட்ஸ் அப்பில் வேறு வெளியிட்டுள்ளார் .அதை நீக்கவும் பணம் கேட்டு அந்த பெண்ணிடம் பேரம் பேசினார் .மேலும் அடிக்கடி அந்த பெண்ணிடம் கண்ட நேரத்தில் போன் செய்து தொல்லை படுத்தியுள்ளார் .இதனால் அந்த பெண் சைபர் க்ரைமில் அவர் மீது புகாரளித்தார் .

புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்த போது பல அதிர்ச்சிகரமான விஷயம் வெளியே வந்தது .அவர் பெண் போல ஊடகங்களில் பல பெண்களிடம் பழகி அவர்களின் அந்த அந்தரங்க போட்டோக்களை திருடி ,உறவுக்கு ப்ளாக் மெயில் செய்த விவரம் போலீசுக்கு தெரிந்தது .