×

சண்டை போட மறுக்கும் கணவன்… விவாகரத்து கேட்ட மனைவி! – உ.பி-யில் வினோதம்

உத்தரப் பிரதேசத்தில் திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆன நிலையில் கணவன் தன்னிடம் சண்டைபோட மறுக்கிறார் என்பதால் விவகாரத்து வேண்டும் என்று பெண் ஒருவர் மனு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தி நாளிதழ் தினக் ஜாக்ரன் என்ற பத்திரிக்கையில் இன்று வெளியான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் கூறிய காரணம் கேட்டு இஸ்லாமிய பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 

உத்தரப் பிரதேசத்தில் திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆன நிலையில் கணவன் தன்னிடம் சண்டைபோட மறுக்கிறார் என்பதால் விவகாரத்து வேண்டும் என்று பெண் ஒருவர் மனு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நாளிதழ் தினக் ஜாக்ரன் என்ற பத்திரிக்கையில் இன்று வெளியான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் கூறிய காரணம் கேட்டு இஸ்லாமிய பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தனக்குத் திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது. என் கணவர் என் மீது அதீத அன்பு வைத்துள்ளார். நான் தவறே செய்தாலும் கூட அவர் என்னை திட்டுவது இல்லை. என் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கிறார். சமைக்கும் போது உதவி செய்கிறார். இந்த 18 மாதத்தில் சண்டையே வந்தது இல்லை. இவை எல்லாம் ஒருவித மன அழுத்தத்தை எனக்கு ஏற்படுத்தி வருகிறது. அசௌகரியமான சூழலை நான் உணர்கிறேன்.
நான் தவறு செய்தால் அவர் உடனே மன்னிக்கிறார். அவருடன் சண்டை போட, அவரை எதிர்த்து பேசி விவாதிக்க விரும்புகிறேன். நான் என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார். நான் சொல்வதை அப்படியே செய்கிறார். இப்படியான அதீத அன்புள்ள ஒருவருடன் இணைந்து வாழ முடியாது” என்று கூறியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு புத்திமதி சொன்ன பெரியவர்கள், அவருடன் சேர்ந்து வாழக் கூறி விவாகரத்து கோரிக்கையை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர். கணவன் அடிக்கிறான், வேறு தொடர்பு, தாம்பத்தியத்தில் பிரச்னை என வேறு ஏதாவது குறை இருக்கிறதா என்று மத பெரியவர்கள் விசாரித்துள்ளனர்.

ஆனால், அப்படி எந்த குற்றச்சாட்டும் அவர் மீது கூற முடியாது என்று அந்த பெண் கூறவே, அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண்ணின் கணவரிடம் கேட்ட போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. சரியான கணவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படியே நடந்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அவர்கள் இருவரையும் கலந்து பேசி சுமூக தீர்வு காண இஸ்லாமிய நீதி அமைப்பு அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.