×

ஸ்மார்ட் போன் வாங்கித் தர மறுத்த கணவன் ! தற்கொலை செய்து கொண்ட மனைவி !

புதுடெல்லியில் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால் குழந்தைக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தரவேண்டும் என கேட்ட மனைவி கணவர் மறுத்துவிட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுடெல்லி மைதான் காரி பகுதியில் 29 வயது பெண் ஒருவர் தீக்குளித்துவிட்டதாக செ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜோதி என்றழைக்கப்படும் அந்த பெண் மே 27 அன்று காலை 8 மணியளவில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். தகவல்
 

புதுடெல்லியில் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால் குழந்தைக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தரவேண்டும் என கேட்ட மனைவி கணவர் மறுத்துவிட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி மைதான் காரி பகுதியில் 29 வயது பெண் ஒருவர் தீக்குளித்துவிட்டதாக செ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஜோதி என்றழைக்கப்படும் அந்த பெண் மே 27 அன்று காலை 8 மணியளவில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். தகவல் கிடைத்த உடனேயே, போலீசார் சம்பவ இடத்தை அடைந்து அந்தப் பெண்ணை சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஜோதியின் கணவர் அளித்த வாக்குமூலத்தில் தம்பதியினர் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்மார்ட்போன் வாங்க தனது மனைவி வற்புறுத்தியதாக அவர் கூறினார், ஆனால் ஊரடங்கு முடிந்தபின் வாங்கித் தருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த மனைவி குழந்தைகளுக்கு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் உடனே வாங்கித் தரவேண்டும என கேட்டுள்ளார். அதற்கு கணவர் மறுக்கவே ஆத்திரத்தில் உடனே தீக்குளித்துவிட்டார். ஜோதியின் உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.