×

மனைவியை இன்ஸ்டா பிரபலங்களுடன் பழகவிட்டு வீடியோ எடுத்த கணவர்! 

 

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் மொபைல் போன் எண் வழங்கி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தனிமையில் இருப்பவர்களை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி வசூலித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். 

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது நபர் 27 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட தம்பதி கரீம்நகரில் உள்ள அரேபள்ளி ஸ்ரீ சாய் நிவாச அடுக்குமாடி குடியிருப்பில் சில காலமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கணவருக்கு கிரானைட் தொழிலில் ஏற்பட்ட இழப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். இதற்காக மனைவி தனது இன்ஸ்டாகிராமில்  கவர்ச்சிகரமான ரீல்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களையும் தொழிலதிபர்களையும் கவர்ந்திழுப்பது வழக்கம். இதனை பார்த்து தன்னை அணுகுபவர்களிடம் பணம் பேசி, அவர்களை தனது வீட்டிற்கு அழைப்பார். மனைவியுடன் தனியாக இருக்கும்போது, கணவர்  மொபைல் போன்களில் நிர்வாண வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்வார். பின்னர் இந்த வீடியோக்களைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி தம்பதியினர் இருவரும் பயமுறுத்தி பணம் வசூல் செய்து வந்தனர். இந்த பணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் வங்கி தவணைகளை செலுத்தியது மட்டுமல்லாமல், ஒரு டாடா காரையும் வாங்கினார்கள். தங்கள் வீட்டில் விலையுயர்ந்த சோபா செட் மற்றும் ஏசிகளை பொருத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இவர்கள் வலையில் இதுவரை சுமார் 100 பேரை அவர்கள் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பாதிக்கப்பட்டவர் கரீம்நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு சில மாதங்கள் முன்பு  சென்றுள்ளார். அதனையடுத்து மனைவியுடன் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி, ஏற்கனவே அவரிடமிருந்து சுமார் ரூ 14 லட்சம்  வசூலித்த தம்பதியினர், மேலும் ரூ.5 லட்சம்  தர வேண்டும் இல்லையெனில் தங்களிடம் உள்ள வீடியோவை வைரலாக்கி அவரைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர். இதனால் பாதிக்கப்பட்டவர், தனது உயிருக்கு பயந்து, கரீம்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இதனையடுத்து ஏசிபி விஜய் குமாரின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் ரெட்டி தலைமையில் இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி ஒரு  தாபாவில் இருந்த தம்பதியை கைது செய்து அவர்களின் கார், நிர்வாண வீடியோக்கள் கொண்ட மொபைல் போன்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட காசோலைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம்  விசாரித்தபோது, ​​அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால்  மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில்  வைக்க சிறையில் அடைத்தனர். சமூக ஊடகங்களில் தெரியாத நபர்களின் வலையில் சிக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற துன்புறுத்தலுக்கு ஆளானால் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.