×

கணவருடன் மாமியாரும் நாத்தனாரும் சேர்ந்து பெண்ணை ஆசிட் குடிக்க வைத்த கொடூரம் – மருத்துவமனையில் போராடி உயிரிழந்தார்

என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள் என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இறப்பதற்கு முன்பாக அந்த இளம் பெண்ணின் வீடியோ மூலமாக. கணவரும், மாமியாரும் ,நாத்தனாரும் சேர்ந்து ஆசிட் குடித்த வைத்ததில் 50 நாட்கள் உயிருடன் போராடி வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக அவர் ஒரு வீடியோவில் வைத்த வேண்டுகோள் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்த அந்த இளம்பெண் சசி ஜாதவ். இவர் வரதட்சணை கொடுமையால்
 

என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள் என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இறப்பதற்கு முன்பாக அந்த இளம் பெண்ணின் வீடியோ மூலமாக.

கணவரும், மாமியாரும் ,நாத்தனாரும் சேர்ந்து ஆசிட் குடித்த வைத்ததில் 50 நாட்கள் உயிருடன் போராடி வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக அவர் ஒரு வீடியோவில் வைத்த வேண்டுகோள் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்த அந்த இளம்பெண் சசி ஜாதவ். இவர் வரதட்சணை கொடுமையால் கொடுமையாக கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி அவரது கணவர் வீரேந்திர ஜாதவ், பெற்றோரிடம் சென்று மூன்று லட்சம் பணம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். இதற்கு மேலும் வரதட்சணை கொடுக்க தன் குடும்பத்தில் சக்தி இல்லை என்று அந்த பெண் சசி ஜாதவ் வாதாடியிருக்கிறார்.

வரதட்சனை கொடுக்க முடியாத நீ எல்லாம் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம் என்று மனைவியிடம் ஆசிட் கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் மறுக்கவே மாமியாரும் கணவனின் சகோதரியும் சேர்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக அந்த பெண்ணை பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்திருக்கிறார்கள். ஜூன் இருபத்தி எட்டாம் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஆசிட் குடித்ததில் அவதிப்பட்ட அந்தப்பெண் குவாலியர் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குவாலியர் மருத்துவமனையில் நிலைமை மோசமானதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 50 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை அன்று அவர் உயிரிழந்துவிட்டார். உயிரை இழப்பதற்கு முன்பாக, ‘’ என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்’’ என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவில் அவர்கள் பேசியது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.