×

 “மசூதி கட்ட போகிறேன்” எனக் கூறிய எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்

 

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டவிருப்பதாக கூறிய எம்எல்ஏ ஹுமாயூன் கபீரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர். பரத்பூரைச் சேர்ந்த எம்எல்ஏவான இவர், "அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போன்று முர்ஷிதாபாத் நகரில் மசூதி கட்ட போறேன். அதற்கு, நாளை (டிச.6) அடிக்கல் நாட்டப்போறேன்" என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ஹுமாயூன் கபீரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், கொல்கத்தா மேயருமான ஃபர்ஹாத் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவால் ஹுமாயூன் கபீர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹுமாயூன் கபீர், “முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 2026ல் முதலமைச்சராக இருக்கமாட்டார். டிசம்பர் 22 அன்று சொந்தக் கட்சியை அறிவிக்கவுள்ளேன்” என்றார்.