×

‘கொரோனா தடுப்பூசியால்’ மருத்துவமனை ஊழியர் மரணமா?: மறுக்கும் உ.பி அரசு!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் உள்ள இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மஹிபால் சிங்(46) என்பவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 24 மணி நேரத்திற்கு பிறகு அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என
 

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் உள்ள இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மஹிபால் சிங்(46) என்பவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 24 மணி நேரத்திற்கு பிறகு அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட மஹிபால் அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் பணியாற்றியதாகவும், மறுநாள் நெஞ்சுவலியால் துடித்த திடீரென உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மஹிபாலின் மரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானால் தான் உண்மை தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், Cardio-Pulmonary நோயால் தான் அவர் உயிரிழந்திருப்பதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கும் அவரது மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.