×

பணம் கொடுத்தால் பெட் கொடு -கொடுக்காதவருக்கு பெஞ்சை கொடு -அரசு மருத்துவனையில் தரகர்கள் அட்டகாசம்.

குஜராத்தில் கொரானா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு ஹாஸ்ப்பிட்டல் பெட் கிடைக்க கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது . குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ,முகவர்கள் மூலம் பணம் வாங்கிக்கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகளை வழங்கி வருகின்றனர் .பணம் கொடுக்காத நோயாளிகளை ஹாஸ்ப்பிட்டலில் இடமில்லை என்று கூறுவதால் அவர்கள் ஹாஸ்ப்பிடல் வாசலில் காத்து கிடக்கின்றனர் நாட்டில் கொரானா பரவல் அதிகரிக்கும் போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது. மேலும்
 

குஜராத்தில் கொரானா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு ஹாஸ்ப்பிட்டல் பெட் கிடைக்க கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது .

குஜராத் மாநிலம்  ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ,முகவர்கள் மூலம் பணம்  வாங்கிக்கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகளை வழங்கி வருகின்றனர் .பணம் கொடுக்காத நோயாளிகளை ஹாஸ்ப்பிட்டலில் இடமில்லை என்று கூறுவதால் அவர்கள் ஹாஸ்ப்பிடல் வாசலில் காத்து கிடக்கின்றனர்

நாட்டில் கொரானா பரவல்  அதிகரிக்கும் போது, ​​இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் சிவில் மருத்துவமனை யில் நிலைமை படு மோசமாக உள்ளது ,அங்குள்ள சில அரசு மருத்துவமனைகள், மருத்துவமனை பெட் வழங்குவதற்கு  முகவர்களின் வழியாக பணம் பறித்து வருகின்றன .

ராஜ்கோட் மருத்துவமனையின் ஒரு முகவர், ஒரு கோவிட் –19 நோயாளியின் குடும்பத்தினரிடம் 9000 ரூபாய் பணம் கொடுத்தால் 30 நிமிடங்களுக்குள்  மருத்துவமனை படுக்கையைப் பெற முடியும் என்று கூறினார்.

புதன்கிழமை, இந்த தரகர்களின் பணம் கேட்கும்  வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியது , அதை பார்த்த   பிரதியுமநகர் காவல் அதிகாரிகள் இருவரை கைது செய்தனர் . குற்றம் சாட்டப்பட்ட தரகர்கள்  ஜாம்நகரில் வசிக்கும் ஜகதீஷ் சோலங்கி (20) மற்றும் ஹிடேஷ் மஹிதா (18) ஆகியோர் ஆவர் .இதில்  சோலங்கி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிகிறார் , ​​ஹிடேஷ் அங்கு  துப்புரவாளராக பணியாற்றுகிறார்