×

மத்திய அரசு கார்களில் இந்தி – அதிகாரிகளுக்கு மறைமுக அழுத்தமா?

அரசின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மத்திய அரசு வாகனம், அல்லது, மாநில அரசு வாகனம் என்பதை குறிப்பிடும் வகையில் சிவப்பு எழுத்துகளில் ‘G’ அடையாளம் இருக்கும். பெரும்பாலும் தமிழக அரசு வாகனங்களில் தமிழக அரசு என சிவப்பு வண்ணம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் கொட்டை எழுத்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். சில வாகனங்களில் மட்டும் பெயரளவுக்கு ஆங்கிலம் இருக்கும். ஆனால், ஆங்கிலம் மட்டுமே அச்சிடப்பட்ட தமிழக அரசு வாகனங்களை பார்க்க முடியாது. அதே நேரத்தில் மத்திய அரசு
 

அரசின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மத்திய அரசு வாகனம், அல்லது, மாநில அரசு வாகனம் என்பதை குறிப்பிடும் வகையில் சிவப்பு எழுத்துகளில் ‘G’ அடையாளம் இருக்கும்.

பெரும்பாலும் தமிழக அரசு வாகனங்களில் தமிழக அரசு என சிவப்பு வண்ணம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் கொட்டை எழுத்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். சில வாகனங்களில் மட்டும் பெயரளவுக்கு ஆங்கிலம் இருக்கும். ஆனால், ஆங்கிலம் மட்டுமே அச்சிடப்பட்ட தமிழக அரசு வாகனங்களை பார்க்க முடியாது.

அதே நேரத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் வாங்கிய வாகனங்களில் ’கவர்மெண்ட் ஆஃப் இந்தியா’ என்கிற வாசகம் ஆங்கிலத்தில் இருக்கும். பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதில்லை.

ஆனால், சில நாட்களாக மத்திய அரசு வாகனங்களில், ’கவர்மெண்ட் ஆப் இந்தியா’ என்கிற வாசகம், ஆங்கிலத்துடன் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளன.

சென்னையிலோ, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ மத்திய அரசு பணி வாகனங்களில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் காண்பதுபோல இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு அலுவலகங்களில், கட்டாயமாக இந்தி இடம்பெற வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால், தவிர்க்க முடியவில்லை என சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் ஓடும் வாகனத்தில், ஆங்கிலம் இருக்கு, இந்தி இருக்கு, தமிழ் இல்லை என தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.