உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி
Oct 30, 2026, 21:42 IST
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே உள்ள ஹாதி பர்வாத் பகுதிக்கு அருகே திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், பலியான பயணிகள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 5 பயணிகளும், ஒரு விமானியும் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.