×

கேரளாவில் தொடர் கனமழை : 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!

 

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கனமழை கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது.   இதனால் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது . குறிப்பாக பத்தனம்திட்டா , கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா ,கோட்டயம், எர்ணாகுளம் ,இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் கேரளாவில் 166% அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.