×

“கருட புராணம்” படி இந்து ஒருவர் இறந்தால் மதச் சடங்கு செய்ய வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல்

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அம்மாநில காவல்துறையினர் அப்பெண்ணின் ஊரில், இரவோடு இரவாக இறுதி சடங்கை செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும், அம்மாநில காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச
 

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அம்மாநில காவல்துறையினர் அப்பெண்ணின் ஊரில், இரவோடு இரவாக இறுதி சடங்கை செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும், அம்மாநில காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நீதித்துறை அதிகாரி சந்திர பன் சிங்  என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “கருட புராணம் படி ஹிந்து ஒருவர் இறந்தால் மதச் சடங்கு செய்ய வேண்டும். ஆனால் ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை மதநம்பிக்கையை புண்படுத்தும் வகையில் காவல்துறையினர் எரித்துள்ளனர். அவர்களை தண்டிக்க வேண்டும். ஒருவர் இறந்த பின்னர் சடங்கு, சம்பிரதாயங்கள் மூலம் மரியாதை செய்ய வேண்டும் என்பது ஐதீகத்தை மீறி உணர்வுகளை காயப்படுத்தியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.