×

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம்; தொடங்கியது சிபிஐ விசாரணை!

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிர்பயா வழக்கில் நடந்ததை போல, இந்த பெண்ணும் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உடல், பெற்றோரின் அனுமதியின்றி காவல்துறையினரால்
 

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிர்பயா வழக்கில் நடந்ததை போல, இந்த பெண்ணும் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உடல், பெற்றோரின் அனுமதியின்றி காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரச்னையை தவிர்ப்பதற்காக இரவோடு இரவாக உடலை எரித்ததாக அம்மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பூதாகரமாக உருவெடுத்த இந்த வழக்கை, சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

அதற்கு இணங்க, இந்த வழக்கை விசாரிக்க 2 நாட்களுக்கு முன்னர் சிபிஐ ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், இன்று சிபிஐ அதிகாரிகள் ஹத்ராஸ் சம்பவம் நேர்ந்த இடத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.