×

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட்… ஹரியானா அரசு திட்டம்

ஹரியானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து எதிர்கால தலைமுறையினர் அனைவரும் அவசியம் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏழ்மை காரணமாக குழந்தைகளின் கல்வி தடை பட கூடாது என்பதற்காக மாநில அரசுகள், மதிய உணவு, இலவச பாட புத்தகங்கள், சீருடை போன்றவற்றை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச லேப்டாப் (குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு)
 

ஹரியானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து எதிர்கால தலைமுறையினர் அனைவரும் அவசியம் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏழ்மை காரணமாக குழந்தைகளின் கல்வி தடை பட கூடாது என்பதற்காக மாநில அரசுகள், மதிய உணவு, இலவச பாட புத்தகங்கள், சீருடை போன்றவற்றை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச லேப்டாப் (குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு) போன்றவையும் வழங்கப்படுகிறது.

மாணவிகள் (கோப்புபடம்)

இந்த சூழ்நிலையில் ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேப்லெட் வழங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்டியலிடப்படாத, பட்டியில் சாதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகம் உள்பட அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த அரசு பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டேப்லெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டேப்லெட்டுகள்

மாநிலத்தில் டிஜிட்டல் கல்வி பரிசீலனையில் உள்ளது. நூலகத் திட்டத்தின் அடிப்படையில் டேப்லெட் விநியோகிக்கப்படும். அதன்கீழ் டேப்லெட் மாநில அரசின் சொத்தாக இருக்கும். மேலும் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் மாணவர்கள் டேப்லெட்டை திருப்பி தர வேண்டும். டேப்லெட்டுகளில் தேர்வுகள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள் போன்றவை அதில் ஏற்றப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.