×

“நோயாளியை தவிக்க விட்டார் ,நர்ஸுக்கு ரூட்டு போட்டார்”-கொராணா மருத்துவமனையில் நர்ஸை பாலியல் கொடுமை செய்த டாக்டர்..

கொரானா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர் ,அங்கு வேலை செய்யும் நர்ஸிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தால் அந்த மருத்துவமனை நர்ஸுகள் அதிச்சியடைந்துள்ளனர் ஹரியானா மாநிலம் பன்ச்குலா மருத்துவமனையில் நிறைய கொரானா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .அங்கு பல இளம் டாக்டர்களும் ,இளம் நர்ஸுகளும் பணிபுரிகின்றனர் .அங்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் அழகிய நர்ஸும் கொரானா நோயாளிகளை கவனித்து வருகிறார் . கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணியளவில் அந்த மருத்துவமனையில் இருக்கும் ஒரு
 

கொரானா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர் ,அங்கு வேலை செய்யும் நர்ஸிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தால் அந்த மருத்துவமனை நர்ஸுகள் அதிச்சியடைந்துள்ளனர்

ஹரியானா மாநிலம் பன்ச்குலா மருத்துவமனையில் நிறைய கொரானா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .அங்கு பல இளம் டாக்டர்களும் ,இளம் நர்ஸுகளும் பணிபுரிகின்றனர் .அங்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் அழகிய நர்ஸும் கொரானா நோயாளிகளை கவனித்து வருகிறார் .

கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணியளவில் அந்த மருத்துவமனையில் இருக்கும் ஒரு டாக்டர் அந்த பஞ்சாப் நர்ஸின் அறைக்குள் குடிபோதையில் நுழைந்துள்ளார் .அவர் அப்போது அந்த அறையிலிருந்த நர்ஸிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் .இதனால் பயந்துபோன அந்த நர்ஸ் கூச்சல் போட்டு கத்தினார் .அவர் கூச்சல் போடுவதை பார்த்த அந்த டாக்டர் உடனே அங்கிருந்தது தப்பியோடிவிட்டார் .

உடனே அந்த நர்ஸ் அந்த டாக்டர் மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார் .உடனே அந்த ஹாஸ்ப்பிட்டலை சேர்ந்த ஆர்.எம்.ஓ,மற்றும் பி.எம்.ஓ மற்றும் பலர் அந்த வார்டுக்கு வந்தனர் . அந்த புகாருக்குள்ளான மருத்துவரை அவர்கள் மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு அழைத்துச் செல்ல தேடியபோது, ​​அவர் ஓடிவிட்டதால், மறுநாள் விசாரணை நடத்தப்படுமென்று நர்ஸிடம் கூறிவிட்டு சென்றுவிட்டனர்
மறுநாள் மருத்துவமனையில் நர்ஸ் மீது நடந்த பாலியல் துன்புறுத்தலை விசாரிக்க, நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இது திங்களன்று விசாரணையைத் தொடங்க வேண்டியிருந்தது. இருப்பினும், மருத்துவர்களில் ஒருவர் இல்லாததால் எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அந்த நர்ஸ் போலீஸ் நிலையத்தில் அந்த டாக்டர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்