×

குறைந்தது கொரோனா பாதிப்பு.. தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்த உத்தர காண்ட், ஹரியானா மாநில அரசுகள்..

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், ஹரியானா, உத்தரகாண்ட் மாநில அரசுகள் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளன. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தின. இதனையடுத்து தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது ஹரியானாவும், உத்தரகாண்டும் லாக்டவுனை நீட்டித்ததோடு சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது. ஹரியானா
 

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், ஹரியானா, உத்தரகாண்ட் மாநில அரசுகள் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளன.

நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தின. இதனையடுத்து தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது ஹரியானாவும், உத்தரகாண்டும் லாக்டவுனை நீட்டித்ததோடு சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ்

ஹரியானா அரசு அம்மாநிலத்தில் கொரோனா லாக்டவுனை இம்மாதம் 28ம் தேதி நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் இயங்கலாம், ரெஸ்ட்ராண்ட் மற்றும் பார்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை திறனுடன் திறக்கலாம் என்பது உள்பட பல தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஊரடங்கு

உத்தரகாண்டில் கொரோனா ஊரடங்கை இம்மாதம் 29ம் தேதி வரை அம்மாநில நீட்டித்துள்ளது. இருப்பினும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை திறனுடன் திறக்கலாம். பார்கள் 50 சதவீத இருக்கை திறனுடன் இயங்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.