×

“தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்கிய ஹரிவன்ஷ்”: பிரதமர் மோடி பாராட்டு!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விவசாய மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் அவைத் துணைத்தலைவரின் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக காந்தி சிலை
 

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

விவசாய மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் அவைத் துணைத்தலைவரின் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக காந்தி சிலை முன்பு போராட்டம் செய்து வரும் எம்பிகளுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். ஆனால் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்தனர்.

இந்நிலையில் ஹரிவன்ஷ் செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தைக் காட்டுகிறது . மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் இணைகிறேன்’ என்று கூறியுள்ளார்.