×

மோடிஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் : ராகுல் காந்தி ட்வீட்!

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் நாட்டில் உள்ள 70 முக்கிய நகரங்களில் அவரது பிறந்த நாளை கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது . 2014 பிரதமராக பதவியேற்ற மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சாமானிய தொண்டனாக இருந்து பின் முதல்வர் ஆகி, தற்போது இரண்டு முறை நாட்டின்
 

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் நாட்டில் உள்ள 70 முக்கிய நகரங்களில் அவரது பிறந்த நாளை கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது . 2014 பிரதமராக பதவியேற்ற மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சாமானிய தொண்டனாக இருந்து பின் முதல்வர் ஆகி, தற்போது இரண்டு முறை நாட்டின் பிரதமராக வீற்றிருக்கும் மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , திரைப்படங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடிஜி-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.