×

கொரோனா எதிரொலி: ஹஜ் பயணம் ரத்து! 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் விமான சேவை தடைபட்டதால் சவுதி அரேபிய அரசு கடந்த மார்ச் 12-ம் தேதியே ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது. இதுவரை இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் தொடங்குவது குறித்து எந்த நாட்டுக்கும் சவுதி அரேபியா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் நடக்காது என்று எண்ணி பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தாங்களாகவே முன்வந்து ஹஜ் புனிதப் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டன.
 
ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசு எந்தவிதமான தகவலும் அளிக்காததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் செல்லப் பணம் செலுத்தி இருந்தார்கள். இதேபோல் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டியும் அறிவித்திருக்கிறது.