×

“என் புள்ளையோட படுத்தா பேய் புடிச்சிக்கும்” முதலிரவுக்கு தடை போடும் மாமியார் -ஆறு மாதமாக அவஸ்தைப்படும் மருமகள்.

ஒரு புதிதாக கல்யாணமாகி வந்த மருமகளை, கடந்த ஆறு மாதமாக முதலிரவு நடத்தாமல் பேய் ,பிசாசு என்று காரணம் கூறி கணவரிடமிருந்து பிரித்து வைத்த மாமியார் மீது அந்த மருமகள் போலீசில் புகாரளித்துள்ளார் . குஜராத் மாநிலம் அஹமதாபத்தில் உள்ள வதேராவில் ஒரு இளம் ஜோடி பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டது .அவர்கள் திருமணம் செய்து கொண்ட இந்த ஆறு மாதமாக அவரின் மாமியார் கணவனோடு முதலிரவு நடத்த தடை போட்டுள்ளாராம் .இதற்கு அவரின் கணவரும்
 

ஒரு புதிதாக கல்யாணமாகி வந்த மருமகளை, கடந்த ஆறு மாதமாக முதலிரவு நடத்தாமல் பேய் ,பிசாசு என்று காரணம் கூறி கணவரிடமிருந்து பிரித்து வைத்த மாமியார் மீது அந்த மருமகள் போலீசில் புகாரளித்துள்ளார் .


குஜராத் மாநிலம் அஹமதாபத்தில் உள்ள வதேராவில் ஒரு இளம் ஜோடி பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டது .அவர்கள் திருமணம் செய்து கொண்ட இந்த ஆறு மாதமாக அவரின் மாமியார் கணவனோடு முதலிரவு நடத்த தடை போட்டுள்ளாராம் .இதற்கு அவரின் கணவரும் உடந்தையாக இருக்கிறாராம் .ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அந்த மருமகள் அவரின் மாமியாரை கேட்டதற்கு என் மகனோடு நீ உறவு கொண்டால் உன் உடம்பிலிருக்கும் பேய் அவன் உடம்பில் புகுந்துகொள்ளும் என்று விட்டலாச்சார்யா படம் போல கதை சொல்கிறாராம் .அது மட்டுமல்லாமல் அடிக்கடி அடித்து கொடுமை படுத்தியுள்ளார் .
மேலும் எதிர்த்து கேள்வி கேட்டால் அவரின் மாமனாரை விட்டு கொடுமை படுத்தியுள்ளார்.அதனால் அவர் தன்னுடைய கணவனை விட்டு கடந்த மார்ச் மாதம் பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் .பிறகு சிலரின் முயற்சியால் சமரசம் பேசி கணவனோடு அந்த பெண்ணை சேர்த்து வைக்க முற்பட்டபோது அதற்கும் மாமியார் தடை போட்டுள்ளார் .,இதனால் ஆறு மாதமாக பொறுத்து பார்த்த அந்த மருமகள் தன்னுடைய மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்