×

ஒரே நேரத்தில் 3,000 கேமராக்களுக்கு போஸ்; ரோஜா செய்த புதிய சாதனை

 

திரைப்பட முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர் நலமேம்பாடு, கலாச்சார துறை அமைச்சரான ரோஜா  புதிய சாதனை படைத்து வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டையை சேர்ந்த ரோஜா 1990களில் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து தமிழகம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனது திறமையின் மூலம் வளர்ச்சி அடைந்தார். திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்த  பின்னர் சின்னத்திரை வெள்ளித்திரைகளில் நடித்து கொண்டு இருந்த நிலையில் அரசியலில் களம் இறங்கி முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகரரெட்டி இருந்தபோது காங்கிரஸ் ,அதன்பின்னர் தெலுங்கு தேசம் என கட்சியில் இருந்தார். ஆனால் அவர் எந்தகட்சியில் உள்ளாரா அந்த கட்சி ஆட்சியை பிடிக்காது எனவும் ராசி இல்லாதவர் என அனைவராலும் கூறப்பட்டு வந்தார். மேலும் தெலுங்கு தேச கட்சியில் அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக அக்கட்சியினரே செயல்ப்பட்டதால் தேல்வியை தழுவினார். 

இந்நிலையில் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்து நகரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார். இந்தமுறை அவருக்கு ஜெகன்மோகன் முதல்முறையே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் மேம்பாட்டு துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெகன் மோகனின் இரண்டவது கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அவருக்கு சுற்றுலா, இளைஞர் நலமேம்பாடு, கலாச்சாரத்துறை நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். தற்போது புதிய சாதனையாக வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதற்காக விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றியபோது அவரை சுற்றிலும் மூன்றாயிரம் கேமராக்களோடு போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டு ஒன் கிளிக் ஆன் சேம் டைம் எ ஒரே நேரத்தில் 3000 போட்டோக்களை எடுத்தனர். இதனை தொடர்ந்து போட்டோகிராபர்களுடன் ரோஜா உற்சாகமாக செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். உலகில் இதுவரை ஒரு பெண் அமைச்சரை ஒரே நேரத்தில் 3000 போட்டோக்கள் எடுத்ததில்லை. இதை அடுத்து வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் இந்தியாஸ் யுனிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சாதனை புத்தகங்களில் நடிகை ரோஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றுகளும் வழங்கப்பட்டது.